Yaarum Illa Ponnerame Lyrics in Tamil
யாரும் இல்லா பொன் நேரமே
உன் மாயங்கள் தானே கண்ணோரமே
காடும் காற்றும் கை வீசுமே
உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே
நீயும் நானும் வாழும் வரை
காட்டில் எங்கும் காதல் மழை
நம்மை போலே இரண்டு சிலை
இது போதும் என் காலம் வரை
ஆடும் தோணி நீரில் சிறை
பாடும் வண்டு தேனில் சிறை
காணும் யாவும் கண்ணில் சிறை
இதுபோல் நானும்
இன்பத்தில் ஆயுள் சிறை
துருவென இருந்தேன்
துணியென மடித்தாய்
துடுப்பின்றி அலைந்தேன்
துணையாய் கிடைத்தாய்
மணல் என இருந்தேன்
மலர்வனம் கொடுத்தாய்
மரங்களின் நிழலில்
நீயே சிரித்தாய்
நான் அம்போடு வாழ்ந்த
காலம் எல்லாம்
உன் அன்போடு மாறிப் போகுதடி
நான் சொல்லாமல் போன
சோகம் எல்லாம்
ஏன் இல்லாமல் இன்று ஆகுதடி
அழகு பிள்ளைகள்
பாதைக்குள் காயமில்லை
உன் பக்கத்தில்
என் நெஞ்சில் பாரமில்லை
நதியின் ஓசை நகரும் போது
நமையும் தாலாட்டுதே
யாரும் இல்லா பொன் நேரமே
உன் மாயங்கள் தானே கண்ணோரமே
காடும் காற்றும் கைவீசுமே
உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே
நீயும் நானும் வாழும் வரை
காட்டில் எங்கும் காதல் மழை
நம்மை போலே இரண்டு சிலை
இதுதான் என் உயிர் தேவை
பாடகர் : அந்தோணி தாசன்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் : விவேக்
Other Naane Varuven Tamil Lyrics Songs 🎵
0 Comments