ஏலே எளஞ்சிங்கமே
என் சாமி நெஞ்சமே ஓ ஆரிராரோ
ஏலே எளஞ்சிங்கமே
என் சாமி நெஞ்சமே
உன் கூடவே நான் இருப்பேன்
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம
அந்த ஆகாச வீதியில
சூரிய யானையில
ஊர்கோலம் போக போறேன்
ஊரெல்லாம் ஆளப்போறேன் இருளே இல்லாம
புதுசா ஒரு பூமி
உனக்குண்டு சாமி
தாலாட்டும் தாய் மடியா தாங்க வருவேன்
அன்புக்குள் பொத்தி வைக்க
எனயே நீ மறக்க
தேவத கூட்டம் உன்ன தேடி வரும்
ஏலே எளஞ்சிங்கமே
என் சாமி நெஞ்சமே
உன் கூடவே நான் இருப்பேன்
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம
காலமே மாறுமே
காயமும் மாறுமே
திசை எல்லாம் விடியுமே
எதுவுமே முடியும் முடியுமே
போகும் வழி நிழல் போல
கண்ணுக்கு மேல் இமை போல
வழி துணையா வருவேன் நானே
ஏலே ஏலே
எளஞ்சிங்கமே
என் சாமி நெஞ்சமே
உன் கூடவே நான் இருப்பேன்
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம
அந்த ஆகாச வீதியில
சூரிய யானையில
ஊர்கோலம் போக போறேன்
ஊரெல்லாம் ஆளப்போறேன் இருளே இல்லாம
Other Cobra Tamil Lyrics Songs 🎵
0 Comments